பிக்பாஸ் 6வது சீசன் இறுதிக்கட்டம் வரை செல்ல தகுதியான போட்டியாளராக உள்ளே நுழைந்தவர். இளம் பாடகரான இவர் மீது மக்களுக்கு நல்ல எண்ணம் ஆரம்பத்தில் இருந்தது.

பின் நாளுக்கு நாள் அவர் பெண்களிடம் நடந்துகொண்ட விதம் கோபத்தை ஏற்படுத்த அவர் வெளியேறிவிட்டார்.
இந்த நிலையில் நிகழ்ச்சி குறித்து அவர் நடந்துகொண்ட விதத்திற்கு வந்த குற்றச்சாட்டு குறித்தும் முதன்முறையாக வீடியோவில் பேசியுள்ளார். அதில் அவர், நான் என் உறவினர் வீட்டில் இருப்பது போல் தான் இருந்தேன், மக்களுக்கு என்னுடைய செயல்கள் கோபத்தை ஏற்படுத்தினால் நான் அதை மாற்றிக் கொள்கிறேன்.