வத்திக்குச்சி வனிதா நயன்தாராகாக கஸ்தூரி போட்டு தொம்சம் பன்னிட்டாங்க!

நயன்தாரா தனது குழந்தைகள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டது முதல், அவரைப் பற்றிய செய்திகள் ஊடகங்களில் வெள்ளமாக வருகின்றன. நான்கு மாதக் குழந்தைக்கு தாயான நயன்தாரா குறித்து மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எல்லோர் மனதிலும் இருக்கும் விஷயங்கள் இப்போதுதான் வெளிவரத் தொடங்கியுள்ளன. இது எதிர்பார்த்ததுதான் என்றாலும், சட்டப் புத்தகத்தைக் கரைத்து குடித்துவிட்டுப் பேசுவதாகச் சிலர் சொல்லும் கருத்து சற்று ஓவராகத் தெரிகிறது. நடிகை கஸ்தூரி அப்படி ஒரு செயலை செய்தார்.
இது குறித்து அவர் எனக்கு சட்டம் தெரியும் மருத்துவர் ரீதியாக இது தப்பு என்றெல்லாம் அதிமேதாவி போல் பேசி இருந்தார். இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மிக முக்கியமாக வனிதா விஜயகுமார் கஸ்தூரியை வெளுத்து வாங்கினார்.
அதாவது குழந்தை பிறப்பது புனிதமான விஷயம். ஆனால் அதனைக் கொண்டாடாமல், அதில் உள்ள குறைகளை மட்டும் ஆராய்ந்து சிலர் வம்பு செய்து வருவதாகச் சுட்டிக்காட்டினார்.
அதுமட்டுமின்றி எனக்கு சட்டமும் மருத்துவமும் தெரியும் என்று சில கோமாளிகள் இப்படி பேசுவார்கள் என்று கஸ்தூரியை நேரடியாக தாக்கினார். அவரது கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இரண்டு குழந்தைகளுக்கு தாயாகவும் தந்தையாகவும் மாறிவிட்டதாக அவர்கள் வெளியிட்ட மகிழ்ச்சியான பதிவு இப்படியொரு சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த சந்தோஷத்தை கூட கொண்டாவிடாமல் சிலர் ஏன் இப்படி பேசுகிறார்கள் என நயன்தாராவுக்கு ஆதரவாக ரசிகர்கள் பேசி வருகின்றனர்.