பவர் ஸ்டாரின் பரிதாப நிலை?

இப்போ நான் 2 படத்துல ஹீரோவா நடிச்சிக்கிட்டு இருக்கேன். தகிடு தத்தம், பிக் அப் போன்ற படங்கள்.
முருங்கைக்காய்ன்னு ஒரு படம் எடுக்க இருந்த நேரத்தில் புரொடியூசருக்கு கொஞ்சம் உடல்நிலை சரியில்லை.அதனால் அது தள்ளிப்போயிருக்கு.
பிக்அப் படம் ஷூட்டிங்கில் எனக்கு ஒரு ஆக்சிடெண்ட் ஆகிருச்சு. ஸ்பைனல்கார்டில் அடி பட்டிடுச்சி.
டாக்டர் கவனமா இருக்கச் சொன்னார். 10 நாள் ரெஸ்ட் எடுத்திட்டு ஷூட்டிங் போகச் சொன்னார். நான் கவனம் இல்லாமல் இருந்திட்டேன்.
ரொம்ப வலி வந்து அவதிப்பட்டு ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனேன்.அதுக்குள்ள நான் செத்துபோய்ட்டேன்னு புரளி கெளப்பிட்டாங்க.