பருக்களால் ஏற்படும் தழும்புகள் இருந்த இடம் தெரியாமல் மறைய சில அழகுகுறிப்புகள்!
முகப்பருவால் ஏற்படும் தழும்பு
முகத்தில் உண்டாகும் பருக்கள் மறைந்த பின்னரும், இந்த தழும்புகள் விரைவில் மறைவதில்லை . இந்த தழும்புகளை விரைவில் மறைய உதவும் சில அழகுகுறிப்புகள் பற்றி இங்கு காணலாம்.
சந்தனம் பேக்
ஒரு ஸ்பூன் சந்தனப் பொடியுடன் ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்த பேஸ்ட் போல் தயார் செய்யவும். பின்னர் இந்த சேர்மத்தை தழும்புகளின் மீது தடவி, ஒரு மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் சுத்தம் செய்ய நல்ல மாற்றம் தெரியும்.
வெந்தயம் பேக்
2 ஸ்பூன் வெந்தயத்தினை சிறிதளவு தண்ணீருடன் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து, தழும்புகள் உள்ள இடத்தில் 3-4 நிமிடங்கள் தேய்த்து மசாஜ் செய்யவும். பின்னர் குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை சுத்தம் செய்துவிட நல்ல பலன் கிடைக்கும்.
தேன்
பருக்களால் உண்டான இந்த தழும்புகளின் மீது சிறிதளவு தேன் தடவி,மசாஜ் செய்யவும். 10 நிமிடங்களுக்கு பின்னர் குளிர்ந்த நீர் கொண்டு இதனை சுத்தம் செய்துவிடவும். வாரம் 3 முறை இவ்வாறு செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.
கற்றாழை ஜெல்
குளிப்பதற்கு முன்,பின் என தினமும் 3 - 4 முறை முகத்திற்கு இந்த கற்றாழை ஜெல்லினை பயன்படுத்தி மசாஜ் செய்து வர, சருமத்தில் காணப்படும் தழும்புகள் படிப்படியாக மறையும்.
எலுமிச்சை சாறு
சிறிதளவு எலுமிச்சை சாறு எடுத்து முகத்தில் 2 - 3 நிமிடங்களுக்கு தேய்த்து மசாஜ் செய்யவும். பின்னர் குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை சுத்தும் செய்துவிட நல்ல பலன் கிடைக்கும்.
ரோஸ் வாட்டர்
ரோஸ் வாட்டர் தேய்த்து தினமும் குறைந்தது 3 முறை முகம் கழுவி வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள் குறையும். ரோஸ் வாட்டர் கிடைக்கவில்லை எனில், ரோஜா இதழ்களை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து பின் இந்த நீரை பயன்படுத்தவும்.
உருளைக்கிழங்கு
உருளைக் கிழங்கு துண்டுகளை சேர்த்து பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ளவும். பின்னர் இந்த பேஸ்டினை முகத்திற்கு அப்ளை செய்து நன்கு உலர விட்டு சுத்தம் செய்துவிட நல்ல பலன் கிடைக்கும்.