நடிகை மீனா தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் போன்ற இந்திய மொழி படங்களில் நடித்து பிரபலமானவர். மார்க்கெட் காலம் வரை ஹீரோயினாக கலக்கிய இவர், பின் வந்த படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடினார்.
இப்போது பெரும்பாலும் அம்மா, அண்ணி போன்ற வேடங்களில் நடித்து வருகிறார்.
இவர் கடைசியாக மலையாளத்தில் த்ரிஷ்யம் 2 படத்தில் மோகன்லாலின் மனைவியாக நடித்தார்.
மீனாவின் கணவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இப்போதுதான் மீனா தனது கணவரின் இழப்பில் இருந்து மெல்ல மீண்டு வருகிறார்.
இந்த நேரத்தில்தான் நடிகை மீனாவின் மறுமணம் குறித்து செய்திகள் பரவி வருகின்றன. மீனா விரும்பாவிட்டாலும், மறுமணத்திற்கு சம்மதிக்க பெற்றோர் வற்புறுத்திய போதும், குடும்ப நண்பரை திருமணம் செய்து கொள்வதாக வதந்தி பரவி வருகிறது.
ஆனால் இந்த செய்தியை முற்றிலும் மறுத்த மீனா, இது வதந்தி என்று கூறியுள்ளார்.