ரத்தன் டாடாவோட கதைய இந்த ஹீரோ வச்சி பண்ணப்போறாங்களா

இறுதிச்சுற்று படத்தின் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் சுதா கொங்கரா. அதையடுத்து சூரரைப் போற்று படத்தை இயக்கி இருந்த நிலையில் அதற்கு பல தேசிய விருதுகள் கிடைத்தது.
சுதா கொங்கரா தற்போது சூரரைப் போற்று படத்தின் போது இந்தி ரீமேக்கில் இயக்கி வருகிறார். இந்தக் கதை ஜி.ஆர்.கோபிநாத்ன் வாழ்க்கை வரலாறு. ஏர் டெக்கான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தைத் தொடங்கி ஏழைகளைக் கூட 1 ரூபாய்க்கு பறக்க வைத்தவர் கோபிநாத்.
இந்நிலையில், ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க சுதா கொங்கரா முயற்சி செய்து வருகிறார். அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
படத்தில் சூர்யா அல்லது அபிஷேக் பச்சன் டாடாவாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. மேலும் இந்த படத்தை 2023ல் வெளியிட சுதா கொங்கரா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.