‘வாத்தி’ ரிலீஸ் உற்சாகத்தில் ரசிகர்கள்!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘வாத்தி’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது .
தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
புதிய ரிலீஸ் தேதியை பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.
இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டரையும் வெளியிட்டுள்ள நிலையில் அந்த போஸ்டர்கள் தற்போது வைரலாகி வருகிறது
இந்தப் படம் 2023 ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போது வெளிவந்த 'திருச்சிற்றம்பலம்', 'நானே வருவேன்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெற்றி பெற்றுள்ளன.
இந்நிலையில் ‘வாத்தி’ தனுஷின் ஹாட்ரிக் வெற்றி படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.