கார்த்தியின் 'ஜப்பான்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் வெளியாகிறது
ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை குக்கூ, ஜோக்கர் போன்ற படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்குகிறார்
ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருக்கிறார். இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அணு இமானுவேல் நடிக்கிறார்.
ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு, அன்பறிவ் சண்டைப் பயிற்சி வழங்குகிறார்.
சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சர்தார் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.
கார்த்தியின் அடுத்த திரைப்படமான 'ஜப்பான்' குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.