நம்ம முத்து சன்னி கூட நடிச்சது இல்லாம இப்ப இவ்ளோ பெரிய ஹீரோகூட நடிக்கப்போறாரா?
பிக் பாஸ் 6 நிகழ்ச்சியில் முதல் நபராக நுழைந்தவர் ஜி.பி. முத்து. Youtube மற்றும் டிக் டாக் மூலம் பிரபலமான இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.
இரு வாரங்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த ஜி.பி. முத்து, தனது மகன்களை பார்க்கவேண்டும் என்று கோரிக்கை வைத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ள ஜி.பி. முத்து அடுத்ததாக சன்னி லியோனுடன் இணைந்து OMG எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், அடுத்ததாக அஜித் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்திருப்பதாகவும், அதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் ஜி.பி. முத்து தெரிவித்துள்ளார்.