யுவனோட ம்யூஸிக்ல, தனுஷ் இரண்டு ஹீரோ வச்சு பட எடுக்க போறாரா?

சினிமாவைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் இரண்டு நடிகர்களுக்கு இடையேயான போட்டியைப் பார்த்திருக்கிறோம். அந்த வகையில் தற்போதுள்ள சூழ்நிலையில் சிம்பு, தனுஷ் ரசிகர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.
இருவரும் இதுவரை இணைந்து ஒரு படத்திலும் நடித்ததில்லை. தற்போது சிம்புவும், தனுஷும் விரைவில் படம் பண்ணப் போவதாக ஒரு செய்தி வந்துள்ளது.
இப்படத்தை தனுஷ் இயக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. சிம்பு மற்றும் தனுஷ் இருவரும் வசனம் மற்றும் திரைக்கதையில் கவனம் செலுத்தப் போகிறார்கள்.
இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. யுவன் ஏற்கனவே தனுஷ் மற்றும் சிம்புவுக்கு பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.
முதன்முறையாக சிம்பு, தனுஷ், யுவன் இணைந்து படம் தயாரிக்கவிருப்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால் இது குறித்த உறுதிப்பாடு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.