பிக் பாஸ் நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகிறது. இந்த பிக்பாஸ் 6ல் 20 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.அவர்களில் ஒருவர் சீரியல் நடிகை ஆயிஷா.

இவர் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தால் என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்தார். அதன் பிறகு அங்கு ஏற்பட்ட சில பிரச்சனைகளால் ஜீ தமிழுக்கு சென் சத்யா சீரியலில் ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்தார்.
ஜீ தமிழில் சூப்பர் ஹிட் ஆன தொடர்களில் சத்யாவும் ஒன்று. விஜய் டிவியில் மீண்டும் வந்த ஆயிஷா தற்போது பிக் பாஸ் சீசன் 6ல் பங்கேற்று வருகிறார்.
இந்த 24 மணி நேர பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆயிஷா தனது சீரியல் துணை இயக்குனர்களை பற்றி மிக மோசமாக பேசியுள்ளார்.
அதாவது சீரியல் படப்பிடிப்பின் போது ஆயிஷா தூங்கி கொண்டிருந்தால், தன்னை எழுப்ப வரும் உதவி இயக்குனர்களை அடித்து விடுவாராம். அதுமட்டுமின்றி கால்களால் உதைப்பாரம். இதனால் தான் பல துணை இயக்குனர்கள் அவரை தூக்கத்தில் இருந்து எழுப்ப பயப்படுகிறார்கள் என திமிராக கூறியுள்ளார்.
வீட்டுக்குள் சிரித்துக்கொண்டே ஜாலியாக இருக்கும் ஆயிஷாவின் இன்னொரு முகம் ரசிகர்களை சற்று அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.