பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் முதல் ஆள் இவரா..!
பிக்பாஸ் 6 பரபரப்புக்கும், சண்டைக்கும் பஞ்சமில்லாமல் நடந்து வருகிறது.
முதல் வாரம் இன்னும் முடிவடையாத நிலையில், பிக்பாஸ் வீட்டை விட்டு முதலில் வெளியேறப் போவது யார் என்ற சலசலப்பு கிளம்பியுள்ளது.
ஆயிஷா, விக்ரமன் மற்றும் அசீம் ஆகியோர் அடுத்த வாரத்திற்கான நேரடி நாமினேஷனில் உள்ளனர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் முதல் நபர் தனலட்சுமி தான் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
ஏனெனில் ஜி.பி. முத்துவைப் பார்த்தாலே காண்டாகுது என்று தனலட்சுமி கூறினார்.
இதைப் பார்த்த ஜிபி முத்து ரசிகர்கள் பலரும், அடுத்த வார எலிமினேஷனில் வீட்டை விட்டு வெளியேறும் முதல் ஆள் தனலட்சுமிதான் என்று கூறி வருகின்றனர். என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.