மணிரத்னம் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வெளியான படம் பொன்னியின் செல்வன். இப்படத்தில் விக்ரம், த்ரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், கார்த்தி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

த்ரிஷா நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்களை மிகவும் கவர்ந்த ஒரு கதாபாத்திரம்.
இந்த கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் நடிகை கீர்த்தி சுரேஷ் தேர்வு செய்யப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
கீர்த்தி சுரேஷ் அண்ணாத்த படத்தில் நடித்ததால் பொன்னியின் செல்வனை நிராகரித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் எப்படி நடித்திருப்பார் என்று ரசிகர்கள் பலரும் பொன்னியின் செல்வன் படத்தின் போஸ்டர் டிசைன் மூலம் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.