விவேக் இந்த ஹீரோகிட்ட கெஞ்சி கேட்டும் இவரு இப்படி பன்னுவாருனு யாருமே நினைக்கல?
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் விவேக். பாலக்காட்டு மாதவன் திரைப்படம் ஜூலை 3, 2015 அன்று வெளியானது. இப்படத்தில் விவேக் மற்றும் சோனியா அகர்வால் நடித்திருந்தனர்.
இந்த படத்திற்கு தமிழ்நாடு, மலேசியா என பல இடங்களில் படத்திற்கு தியேட்டர்கள் கிடைத்தன. கேரளா ஸ்டேட், கர்நாடக ஸ்டேட் என படமும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் முதலில் ஜூலை 10ஆம் தேதி வெளியாகும் என்று இருந்த முன்னணி நடிகரின் படம் ஜூலை 3ஆம் தேதி வெளியானது.
உடனே அனைத்து தியேட்டர்களும் சரிய ஆரம்பித்தது தமிழகத்தில் இருந்த 200 தியேட்டர்கள் 60 தியேட்டர்களாகவும், மலேசியாவில் இருந்த 60 தியேட்டர்கள் 16 தியேட்டர்களாகவும் மாறியது. கேரளா ஸ்டேட், கர்நாடக ஸ்டேட் எல்லாம் திரும்பி வந்துச்சு. படம் நஷ்டமடைந்தது.
அன்றைய தினம் படத்தை வெளியிட வேண்டாம் என்று முன்னணி நடிகரிடம் கெஞ்சினோம். ஆனால் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை என்று சில வருடங்களுக்கு முன்பு விவேக் கூறினார்.
இதுபற்றி கூறிய விவேக், நடிகர் யார் என்பதை கடைசி வரை கூறவில்லை. இருப்பினும், விவேக்கின் பாலக்காட்டு மாதவன் ஜூலை 3 ஆம் தேதி வெளியானது குறிப்பிடத்தக்கது, அதே நேரத்தில் முன்னணி நடிகர் கமலின் பாபநாசமும் அதே நாளில் வெளியிடப்பட்டது.