ஆர்யா அவரோட அடுத்த படத்துக்கு இத்தன கோடி கேப்பாருனு யாருமே நினைக்கல?

ஆர்யாவின் சமீபத்திய படங்கள் எதுவும் பெரிய வரவேற்பைப் பெறவில்லை. இவர் கடைசியாக நடித்த சார்பட்டா பரம்பரை படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
ஆனால் அதன் பிறகு வெளிவந்த படங்கள் பாக்ஸ் ஆபிஸில் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இந்நிலையில் இவர் கொம்பன் முத்தையாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த அறிவிப்புக்கு பிறகு ஆர்யா இந்த படத்திற்காக கேட்ட சம்பளம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதுவரை பெரிய ஹிட் கொடுக்காத ஆர்யா இந்தப் படத்துக்கு 14 கோடி ரூபாய் சம்பளம் கேட்கிறாராம். இது தயாரிப்பாளரை அதிர்ச்சி அடைய வைத்தாலும் வேறு வழியின்றி இந்த சம்பளத்தை கொடுக்க சம்மதித்துள்ளார்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ஆர்யாவுக்கு ஜோடியாக சித்தி இதானி நடிக்கிறார். கிராமத்து கதையாக உருவாகும் இந்த படம் ஆர்யாவுக்கு பெரிய திருப்புமுனையாக அமையும் என படக்குழு தெரிவித்துள்ளது.