பிக் பாஸ் அவரு வேலைய மொத நாளே ஆரம்பிச்சிட்டாரு போல

நேற்றுதான் பிக் பாஸ் 6 போட்டியாளர்களை ஒவ்வொருவராக வீட்டுக்குள் அனுப்பினார் கமல். வீட்டுக்குள் சென்று ஒருவரையொருவர் சந்தித்து ஒரு சில வார்த்தைகள் மட்டுமே பேசி இருப்பார்கள். அதற்குள் பிக் பாஸ் அனைவரையும் அழைத்து டாஸ்க் கொடுத்தார்.
'வீட்டுக்குள் வந்து சில மணி நேரங்கள் ஆகிறது, எல்லாரையும் எடைபோட்டுப் பார்த்திருப்பீங்க. இதில் எந்தப் போட்டியாளர்கள் உங்களை குறைவாக இம்ப்ரெஸ் செய்தார்கள் என்று சொல்ல வேண்டும். அதிக வாக்குகள் பெறும் நான்கு போட்டியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் மற்றும் அவர்கள் வீட்டிற்கு வெளியே தூங்க வேண்டும் என்றும் பிக் பாஸ் அறிவித்தார்.
இதை கேட்ட போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வீட்டுக்குள் நுழைந்தவுடனே இப்படி ஒரு பணி தங்களுக்கு கொடுக்கப்பட்டதா என்று வெளிப்படையாக புலம்பினார்கள்.
வி.ஜே.விக்ரமன், இலங்கைப் பெண் ஜனனி உள்ளிட்ட 4 பேர் வீட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்டனர்.