என்ன பிரச்சனைக்காக ஜி பி முத்து கமலை பிக் பாஸ் வீட்டுக்குள்ள கூப்டாருனு தெரியுமா?
டிக் டோக் மற்றும் யூடியூப் மூலம் பிரபலமான ஜிபி முத்து இப்போது பிக் பாஸ் சீசன் 6 இன் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த முதல் நபர்.
வீட்டிற்குள் யாரும் இல்லாததை கண்டு ஜிபி முத்து அதிர்ச்சி அடைந்தார். 'யாரும் இல்லை, பயமா இருக்கு' என்று வெகுநேரம் பயத்துடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது கமல் டிவியில் வந்து அவரிடம் பேசினார். தொழில்நுட்பக் கோளாறால் இன்று வீட்டில் நீங்கள் மட்டும் தான் இருப்பீர்கள், அதிகாலை 4 மணி கூட ஆகலாம் என்கிறார்.
இதைக் கேட்ட ஜிபி அதிர்ச்சியடைந்து வணங்கி யாரையாவது அனுப்புங்கள் என்று கெஞ்சுகிறார். அவரை சிறிது நேரம் கலாய்த்துவிட்டு கமல், அடுத்த போட்டியாளரை வீட்டுக்குள் அனுப்பினார்.