மகிமா நம்பியார் ஏன் தாய்லாந்தில் மானம் போச்சு, மரியாதை போச்சு என்றார்?
நடிகை மஹிமா நம்பியாரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. சாட்டை என்கின்ற பள்ளி மாணவியாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தார். அதன் பிறகு பல படங்களில் கதாநாயகியாக நடித்து வளர்ந்து வரும் நடிகை.
மஹிமா தற்போது இயக்குனர் சி.எஸ்.அமுதன் இயக்கும் ரத்தம் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது.
நடிகையின் தனிப்பட்ட புகைப்படத்தை இயக்குனர் லீக் செய்தார் படக்குழுவினர் அனைவரும் தாய்லாந்தில் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், அங்கு நடிகை தூங்கும் புகைப்படத்தை இயக்குனர் அமுதன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
அதை பார்த்த மஹிமா அதிர்ச்சியடைந்து, "என் ஸ்டைல் போச்சு, மானம் போச்சு, மரியாதை போச்சு, எல்லாமே போச்சு. எல்லாமே போய்விட்டது. நான் இந்தியாவுக்கு திரும்பிச் செல்ல விரும்பவில்லை" என்றார்.