பட்டுப்போன்ற மென்மையான சருமத்துக்கு கற்றாழை ஜெல்...

கற்றாழை ஜெல்லானது சிறந்த சன் ஸ்க்ரீன் போன்று செயல்படும்

கற்றாழை ஜூஸ் நிறைய நோய்களுக்கு நிவாரணம் தரக்கூடியது
கடலை மாவு, சந்தனத் தூள், கர்ப்பூரம், மஞ்சள் தூள் ஆகியவற்றை தண்ணீர் அல்லது பால் அல்லது பன்னீரில் கலந்து ஒரு பசை போன்று ஆக்கவேண்டும். அதை முகத்தில் மசாஜ் செய்வது போல நன்றாக பூசிக் கொள்ளவேண்டும். 20 நிமிடங்கள் கழித்து, முகத்தைக் கழுவி விடவேண்டும். முகம் பளபளப்பாக இருக்கும்.
பருக்கள் பிரச்சனையால் அவஸ்தைப்படுபவர்கள் அதிகம். அத்தகையவர்கள் கற்றாழையின் ஜெல்லை சருமத்திற்கு தடவி வந்தால், அதில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பொருள், முகப்பருவை போக்கிவிடும்.
முகப்பரு, முகத்தில் கட்டிகள், தழும்புகள், சரும சுருக்கங்கள், அழுக்கு மங்கிய நிற சருமம் போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் கற்றாழை மிகச்சிறந்த தீர்வாக இருக்கும்
கற்றாழையின் ஜெல்லை தொடர்ந்து பயன்படுத்தும் போது சருமத்தின் நிறம் மாறுகிறது.