இளமையான தோற்றத்திற்கு மாங்காய் - தேன் Face Pack

தோல் சுருக்கங்கள் இல்லாமல் இளமையா இருக்க மாம்பழம்,தேன், கடலைமாவு, பாதாம் பயன்படுத்தி face pack தயார் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள் மாம்பழம்-1, கடலை மாவு -2 டீ ஸ்பூன், பாதாம் -ஒரு கைப்பிடி, தேன் -1 டீ ஸ்பூன்
செய்முறை படி 1

மாம்பழத்தின் சதைப்பகுதியை சீவி எடுத்து ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் அளவு எடுத்தது வைக்கவும்.
செய்முறை படி 2

பாதாமை மிக்சியில் அரைத்து அதில் 1 ஸ்பூன் எடுத்து மாம்பழத்துடன் சேர்க்கவும்.
செய்முறை படி 3

கடைசியாக இதனுடன் கடலை மாவு 2 ஸ்பூன், தேன் 1 ஸ்பூன் சேர்த்து நன்றாக பேஸ்ட் போல கலக்கவும். face pack ரெடி..!
எப்படி யூஸ் பண்ணனும்?

இந்த பேஸ்டை முகம், கழுத்து பகுதியில் நன்றாக மசாஜ் செய்வதுபோல பூசி,15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். பலன் தெரியும்.
சுருக்கங்கள் மறையும்

இதில் கலந்துள்ள தேன் தோல் தளர்ச்சியை தடுத்து மென் கோடுகளை நீக்கி இளமையாக தோற்றம் தருகிறது.
மிருதுவான சருமம்

இந்த face pack -ல் கலந்துள்ள மாம்பழம், கடலை மாவு சரும மாசுவை நீக்கி மென்மையான, பொலிவைத் தருகிறது.
சரும பொலிவு

இந்த face pack -ல் உள்ள மாம்பழம், பாதாம் மற்றும் தேன் கலவை சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து தோலின் இயற்கை நிறத்தை மீட்டு சருமப் பொலிவைத் தருகிறது.