செயின் பறிப்பு கொள்ளையர்கள் போலிஸாரால் கைது

பெண்ணிடம் தாலிக்கொடி பறித்த வாலிபர் சிக்கினார்
வாழப்பாடி: வாழப்பாடி அருகே மொபட்டில் சென்ற பெண்ணின் 7 பவுன் தாலிக்கொடியைப் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த களரம்பட்டி அருகே வடக்கு ரங்கநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் ரகுராமன் மனைவி மோகனப்பிரியா (34). இவர் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி இரவு 9 மணிக்கு சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சேசன்சாவடி மாட்டு ஆஸ்பத்திரி அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பின்னால் பைக்கில் வந்த மர்ம நபர்கள் இருவர், மோகனப்பிரியா கழுத்தில் இருந்த 7 பவுன் தாலிக்கொடியைப் பறித்துச் சென்றனர். இது குறித்து வாழப்பாடி காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபர்களைத் தேடினர். அதில், திருச்சி மாவட்டம் துறையூர் அருகே செல்லிபாளையத்தைச் சேர்ந்த சரண் மற்றும் அவரது நண்பர் ஆமோஸ் பெர்னாண்டோஸ் உள்ளிட்டோர் நகையைப் பறித்துச் சென்றது தெரியவந்தது.
இந்நிலையில், நேற்று கூலித் தொழிலாளி சரண் (26) கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து 5 பவுன் தாலிக்கொடி பறிமுதல் செய்யப்பட்டது. அவரது நண்பர் ஆமோஸ் பெர்னாண்டோஸை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu