அமைச்சரே அரசை வீழ்த்தப்போகிறார்!" – மேட்டூர் அதிமுக மேடையில் அதிரடி

'தி.மு.க., ஆட்சியை கவிழ்க்க அமைச்சர் பேசியதே போதும்'
மேட்டூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள வீரக்கல்புதூர், பி.என்.பட்டி, மேச்சேரி, கொளத்தூர் டவுன் பஞ்சாயத்துகளின் நிர்வாக சீர்கேட்டைக் கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று வீரக்கல்புதூர், நங்கவள்ளி சாலையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் சேலம் புறநகர் மாவட்டச் செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்துப் பேசினார். அவர் தனது உரையில், "தி.மு.க. அமைச்சர் மேடையில் ஆபாசமாகப் பேசியதால் தமிழக பெண்கள் கோபத்தில் உள்ளனர். தி.மு.க. ஆட்சியை எதிர்க்கட்சி கவிழ்க்க வேண்டிய அவசியமில்லை. ஆளுங்கட்சி அமைச்சர் பொன்முடி மேடையில் பேசியதே போதும். வரும் சட்டசபைத் தேர்தலில் மீண்டும் இ.பி.எஸ். முதல்வராவார்" என்று குறிப்பிட்டார்.
ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக அமைப்புச் செயலாளர் செம்மலை உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் ராஜ்யசபா எம்.பி. சந்திரசேகரன், மாவட்ட மகளிரணி செயலாளர் லலிதா, ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர் கலையரசன், டவுன் பஞ்சாயத்துச் செயலாளர்களான வெங்கடாசலம், குமார், ராஜரத்தினம், மோகன்குமார் மற்றும் ஒன்றிய, அமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu