இன்ஸ்டா காதலால் விபரீதம், மனைவிக்கு கத்தி குத்து

இன்ஸ்டா காதலால் விபரீதம், மனைவிக்கு கத்தி குத்து
X
இன்ஸ்டாவில் பழகிய காதலனை நேரில் பார்க்க சென்ற மனைவிக்கு கத்தி குத்து

மாணவியை கத்தியால் குத்தி வாலிபர் தற்கொலை முயற்சி

சேலம் மின்னாம்பள்ளியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் கோரிமேட்டில் உள்ள அரசு கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில், ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த 19 வயது மோகனபிரியனுடன் இன்ஸ்டாகிராம் மூலம் நட்பு ஏற்பட்டது. காலப்போக்கில் இருவரும் நேரில் சந்தித்தனர்.

ஆனால் சந்திப்புக்குப் பிறகு, மாணவி மோகனபிரியனுடன் பேசுவதைத் தவிர்க்கத் தொடங்கினார். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மனம் வருந்திய மோகனபிரியன், "கடைசியாக ஒருமுறை பேச வேண்டும்" என்று கூறி நேற்று காலை சேலம் பழைய பஸ் நிலையத்திற்கு அந்தப் பெண்ணை வரவழைத்தார். அங்கு திடீரென அவர் கத்தியால் அப்பெண்ணின் வயிறு மற்றும் கழுத்துப் பகுதியில் குத்தினார்.

சம்பவத்தைக் கண்ட பொதுமக்கள் மோகனபிரியனைப் பிடிக்க முயன்றபோது, அவர் தனது கை மற்றும் கழுத்தில் கத்தியால் அறுத்து தற்கொலைக்கு முயன்றார். சேலம் டவுன் காவல்துறையினர் இருவரையும் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், "இளம்பெண்ணுக்கு மோகனபிரியனைப் பிடிக்கவில்லை. மேலும், அவரது பெற்றோர் உறவினர் ஒருவருடன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளதாகக் கூறி, மோகனபிரியனுடன் தொடர்பை முற்றிலுமாக துண்டித்துள்ளார்" என்று தெரிவித்தனர்.

Tags

Next Story