காட்டுப்பன்றி இறைச்சி விற்க முயன்ற இருவர் கைது

காட்டுப்பன்றி இறைச்சி விற்க முயன்ற இருவர் கைது
X
சந்தேகத்தின் பேரில் விசாரணையின் பொது காட்டு பன்றி இறைச்சி விற்க முயன்ற இருவர் பிடிபட்டனர்

சேலம் சேர்வராயன் தெற்கு வனச்சரகர் துரைமுருகன் தலைமையில் வனத்துறையினர் நேற்று ஆட்டையாம்பட்டி பகுதியில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த இருவரை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த 35 வயதான ரமேஷ் மற்றும் 38 வயதான மணிவண்ணன் என தெரியவந்தது. இவர்கள் காட்டுப்பன்றி இறைச்சியை விற்பனை செய்ய முயன்று கொண்டிருந்தது விசாரணையில் வெளியானது. வனத்துறையினர் அவர்களிடமிருந்த இறைச்சியை பறிமுதல் செய்து, இருவரையும் வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
future of ai in next 5 years