வாழப்பாடியில் ராணுவ வீரருக்கு அஞ்சலி நிகழ்ச்சி

வாழப்பாடியில் ராணுவ வீரருக்கு அஞ்சலி நிகழ்ச்சி
X
கடந்த வாரம் நடைபெற்ற இந்திய பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்த ஆந்திராவை சேர்ந்த ராணுவ வீரருக்கு அஞ்சலி நடத்தபட்டது

வீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கு வாழப்பாடியில் அஞ்சலி

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் கடந்த மே 8ஆம் தேதி ஏற்பட்ட தாக்குதலில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் முரளி நாயக் வீரமரணம் அடைந்தார். இந்த துயரமான நிகழ்வை முன்னிட்டு, சேலம் மாவட்டம் வாழப்பாடி பஸ்ஸ்டாண்டில், ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் அஞ்சலி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அகாடமி தலைவர் குபேந்திரன் தலைமையில், முரளி நாயக் அவர்களின் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு, தமது மரியாதையை பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும், பல்வேறு சமயங்களில் வீரமரணம் அடைந்த பிற ராணுவ வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் ஆசிரியர் எம்கோ, பயிற்சியாளர் அலெக்ஸ், முன்னாள் ராணுவ வீரர் காசி மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story
ai and future cities