எஸ்.ஐ. தேர்வுக்காக ஈரோட்டில் உதவி மையம் தொடக்கம்

எஸ்.ஐ. தேர்வுக்காக ஈரோட்டில் உதவி மையம் திறப்பு – மே 3 வரை செயல்பாடு
ஈரோடு: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) சார்பில், தாலுகா மற்றும் ஆயுதப்படை பிரிவுகளுக்கான சார்பு ஆய்வாளர் (Sub-Inspector) பதவிக்காக 1,299 காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது.
இந்த தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பிக்கக்கூடிய கடைசி நாள் மே 3 என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு ஏற்படக்கூடிய சந்தேகங்களை தீர்க்கும் பொருட்டு, ஈரோடு மாவட்ட எஸ்.பி. அலுவலக வளாகத்தில் ஒரு உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
விரிவான தகவல்களுக்காக, காலை 9:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை செயல்படும் இந்த மையத்தை, 96552-20100 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இந்த உதவி மையம் மே 3 ஆம் தேதி வரை மட்டும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu