சட்டவிரோத குடியிருப்புக்கெதிராக கோபியில் பா.ஜ.க,வினர் ஆர்ப்பாட்டம்

சட்டவிரோத குடியிருப்புக்கெதிராக கோபியில் பா.ஜ.க,வினர் ஆர்ப்பாட்டம்
X
தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த நபர்களை இனங்கண்டு நாடு கடத்தக்கோரி, இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

பஹல்காம் தாக்குதல் கண்டித்து கோபியில் பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம்

கோபி: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கண்டித்து, தேச விரோத வதந்திகள் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, பா.ஜ.க. ஈரோடு வடக்கு மாவட்டம் சார்பில் கோபி நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும், தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த நபர்களை இனங்கண்டு நாடு கடத்தக்கோரி, இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் செந்தில்குமார், மாநில செயலாளர் மலர்க்கொடி உள்ளிட்ட தலைவர்கள் முன்னிலை வகித்தனர். 60க்கும் மேற்பட்ட பா.ஜ.க. தொண்டர்கள் இதில் பங்கேற்று, எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பினர்.

Tags

Next Story
why is ai important to the future