சென்னையில் 2000 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட (AI) டேட்டா சென்டர் திறப்பு

சென்னையில் தென்னிந்தியாவின் மிகப்பெரிய டேட்டா சென்டர் திறப்பு
சென்னை செங்கல்பட்டு பகுதியில், தென்னிந்தியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமான டிஜிட்டல் டேட்டா சென்டர் ஒன்றை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். சுமார் 2,000 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த தரவு மையம், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் இயங்கும் சிறப்பம்சம் கொண்டதாகும்.
இந்த புதிய டேட்டா சென்டர், ஆயிரம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இது சென்னை நகரத்தை ஒரு முக்கிய டிஜிட்டல் ஹப்பாக மாற்றும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.
இந்த மையம், ஏற்கனவே மும்பை மற்றும் டெல்லியில் செயல்பட்டு வரும் முன்னணி தரவு மையங்களுடன் இணையப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது போன்ற முன்னேற்றமான டிஜிட்டல் உள்கட்டமைப்புகள், தமிழ்நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கே ஒரு பெரிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu