70க்கும் மேற்பட்ட ஜே.சி.பி. உரிமையாளர்கள் போராட்டம்

70க்கும் மேற்பட்ட ஜே.சி.பி. உரிமையாளர்கள் போராட்டம்
X
தற்போதைய செலவுகளை பொருத்து, ஜே.சி.பி. வாடகையை 1 மணி நேரத்துக்கு ரூ.1,400ஆக நிர்ணயிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்

ஈரோடு: வாடகை உயர்வுக்காக ஜே.சி.பி. வாகன உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வாகன உதிரி பாகங்கள், சாலை வரி, காப்பீடு, ஓட்டுனர் ஊதியம், எரிபொருள் உள்ளிட்ட அனைத்து செலவுகளும் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், தற்போதைய வாடகை தரக்குறைவாக இருப்பதாக உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அரசு இதுவரை எந்தவித பதிலும் அளிக்காததால், நேற்று (ஏப்ரல் 21) முதல் அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உரிமையாளர்கள் தெரிவித்ததாவது, தற்போதைய செலவுகளை பொருத்து, ஜே.சி.பி. வாடகையை ஒரு மணி நேரத்துக்கு ரூ.1,400 என்றும், குறைந்தது 2 மணி நேரத்திற்கு ரூ.3,500 என நிர்ணயிக்க வேண்டும் என்பது தான் கோரிக்கை. இந்த வேலைநிறுத்தம் மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. 24ம் தேதி வரை போராட்டம் தொடரும் என்றும், இதில் 70க்கும் மேற்பட்ட ஜே.சி.பி. வாகன உரிமையாளர்கள் பங்கேற்றுள்ளனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story