சேலத்தில் விவசாயி வீட்டில் திருட்டு, பெங்களூருவில் இருவர் கைது

சேலத்தில் விவசாயி வீட்டில் திருட்டு, பெங்களூருவில் இருவர் கைது
X
சேலத்தில் விவசாயி வீட்டில் திருட்டு சம்பவம்: பெங்களூருவில் இருவர் கைது செய்யப்பட்டனர்

விவசாயி வீட்டில் திருடிய வழக்கில் இருவர் கைது – 7 பவுன் நகை மீட்பு

ஆத்தூர் உப்பூஓடையை சேர்ந்த விவசாயி பழனிவேல் (வயது 53) வீட்டில், கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி, 45 பவுன் நகைகள் மற்றும் ரூ.4.50 லட்சம் பணம் திருடப்பட்டதாக அவர் அளித்த புகாரின் பேரில், ஆத்தூர் டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடக்க விசாரணையில், 28 பவுன் நகைகள் மற்றும் பணம் திருடபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

டிஎஸ்பி சதீஷ்குமார் தலைமையில் அமைக்கப்பட்ட இரு தனிப்படைகள், சம்பந்தப்பட்ட மர்ம நபர்களை தேடி தீவிரமாக விசாரணை மேற்கொண்டன. அதன் மூலம், ஈரோடு புளியம்பட்டியைச் சேர்ந்த பாரத்குமார் (37), மற்றும் தர்மபுரி மாவட்டம் அரூரில் உள்ள கம்மாளப்பட்டியைச் சேர்ந்த கவியரசன் (24) ஆகியோர் திருட்டில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. அவர்கள் இருவரும் பெங்களூருவில் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 7 பவுன் நகை மீட்கப்பட்டது.

இவர்களில் பாரத்குமார் மீது கோவை, ஈரோடு, பெருந்துறை, திருப்பூர், திருச்சி, விருதுநகர், சிவகாசி உள்ளிட்ட 36 இடங்களில் திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கவியரசனுக்கும் திருப்பூர், கோவை, திருவண்ணாமலை பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. கோவை சிறையில் இருந்தபோது இந்த இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து இணைந்து திருட்டு தொழிலில் ஈடுபட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இவர்கள் மதுரையில் திருடிய பைக்களை பயன்படுத்தி, ஆத்தூரில் பழனிவேலின் வீட்டில் நுழைந்து 7 பவுன் நகை திருடியதும், பிற வீடுகளில் திருட முயற்சித்ததும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. மதுரையில் பதிவு செய்யப்பட்ட பைக் திருட்டு வழக்கை தொடர்ந்து, மதுரை போலீசார் ஈரோடு வந்த தகவலின் அடிப்படையில், தனிப்படை போலீசார் பெங்களூரு, மைசூரு, தும்கூர் உள்ளிட்ட பகுதிகளில் தேடி, இருவரையும் கைது செய்துள்ளனர்.

Tags

Next Story