கரிய காளியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

கரிய காளியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா
X
இடைப்பாடி அருகே கல்வடங்கம் காவேரி ஆற்றங்கரையில் உள்ள கரிய காளியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

இடைப்பாடி அருகே கல்வடங்கம் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கரியகாளியம்மன் கோவில் திருவிழா, கடந்த 8-ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.

நேற்று கல்வடங்கம் காவிரி ஆற்றில் புனித நீராடிய பக்தர்கள், கரியகாளியம்மன் கோவில் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் இறங்கி, தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடன்களைச் செலுத்தினர். சிலர் தங்கள் கைக்குழந்தைகளுடனும், வேறு சிலர் அலகு குத்தியும் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இவற்றுடன் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகளும் நடத்தப்பட்டன. இவ்விழாவில் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் திரளாகக் கூடி கரியகாளியம்மனை வழிபட்டு அருள் பெற்றனர்.

Tags

Next Story