பனைமரத்தில் ஏறியபோது தவறி விழுந்து உயிரிழந்த தொழிலாளி - தாராபுரத்தில் சோக சம்பவம்!

பனைமரத்தில் ஏறியபோது தவறி விழுந்து உயிரிழந்த தொழிலாளி -  தாராபுரத்தில் சோக சம்பவம்!
X
தண்ணீர்பந்தல் வலசு அருகே உள்ள ஒரு தோட்டத்தில் பனைமரத்தில் ஏறியபோது, தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்து இளைஞர் உயிரிழந்தார்.

தாராபுரத்தில் பனைமரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு :

ஈரோடு மாவட்டம் தாராபுரம் அருகே சிக்கினாபுரம் பகுதியில், விருத்தாசலம் மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயதான சுரேஷ் என்பவர், நுங்கு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். தண்ணீர்பந்தல் வலசு அருகே உள்ள ஒரு தோட்டத்தில் பனைமரத்தில் ஏறியபோது, அவர் தவறி கீழே விழுந்தார். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சுரேஷ், தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அலங்கியம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கல்குவாரி விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் ஸ்டாலினின் நிவாரண அறிவிப்பு!