இடி தாக்கியதில் இரு பசு மாடுகள் பலி

இடி தாக்கியதில் இரு பசு மாடுகள் பலி
X
தொழுவத்தின் மீது விழுந்த இடியால், உள்ளிருந்த இரு பசு மாடுகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது

பவானி அருகே அம்மாபேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை சுமார் 4:30 மணியளவில் திடீரென பலத்த காற்றுடன் இடி மின்னலோடும் லேசான மழையோடும் வானிலை மோசமாக இருந்தது.

நத்தமேடு, மணக்காட்டு தோட்டத்தை சேர்ந்த முருகேசன் என்பவர், ஐந்து நாட்டு பசுமாடுகளைப் பாதுகாத்து வளர்த்து வந்தார். மழை முந்தைய சூழ்நிலையைக் காணும்போது, மாடுகளை தொழுவத்தில் கட்டி விட்டு, வீட்டுக்குச் சென்றிருந்தார்.

அதே நேரத்தில் தொழுவத்தின் மீது விழுந்த இடியினால், உள்ளே இருந்த இரு பசுமாடுகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.

மாடுகளின் மதிப்பு ரூ.1 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என கூறிய முருகேசன், தனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் ஆழ்ந்த வேதனையில் உள்ளார்.

Tags

Next Story