மானை வேட்டையாடி மான் இறைச்சி விற்ற பெண் கைது, இருவர் தலைமறைவு

மானை வேட்டையாடி மான் இறைச்சி விற்ற  பெண் கைது, இருவர் தலைமறைவு
X
தப்பியோடிய இருவரை சத்தியமங்கலம் வனத்துறையினர், கைது செய்வதற்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

வீட்டில் மான் இறைச்சி விற்ற பெண் கைது:

டி.என்.பாளையம் அருகே நரசிபுரத்தில் கட்டுப்படுத்தப்பட்ட விலங்கு வகையான மானின் இறைச்சி விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில், பங்களாப்புதூர் போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

சோதனையில், சாந்தி (வயது 40) என்பவர் வீட்டில் 10 கிலோ மான் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. உடனே அவரை கைது செய்து, சத்தியமங்கலம் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில், பாலு மற்றும் தமிழ்செல்வன் என்ற இருவரும் மானை வேட்டையாடி, அந்த இறைச்சியை சாந்திக்கு கொடுத்து விற்பனை செய்துள்ளதாக தெரியவந்தது. போலீசார் வருவதை அறிந்து இருவரும் தப்பியோடியதாக கூறப்படுகிறது. தற்போது சத்தியமங்கலம் வனத்துறை, அவர்களை கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது.

Tags

Next Story