பா.ம.க. பேனரில் அ.தி.மு.க. நிர்வாகிகள் புகைப்படம் – ஈரோட்டில் கட்சிக்குள் குழப்பம்!

பா.ம.க. பேனரில் அ.தி.மு.க. நிர்வாகிகள் புகைப்படம் – ஈரோட்டில் கட்சிக்குள் குழப்பம்!
X
ஈரோட்டில் வ.உ.சி. பூங்கா அருகே வைக்கப்பட்ட பா.ம.க. பிளக்ஸ் பேனரில், அ.தி.மு.க. வினரின் புகைப்படங்கள் இடம்பெற்றது கட்சிக்குள் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பா.ம.க. பேனரில் அ.தி.மு.க. நிர்வாகிகள் புகைப்படம் – ஈரோட்டில் கட்சிக்குள் குழப்பம்!

வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டை முன்னிட்டு, ஈரோட்டில் வ.உ.சி. பூங்கா அருகே வைக்கப்பட்ட பா.ம.க. பிளக்ஸ் பேனரில், அ.தி.மு.க. மாநகர் 51வது வட்ட செயலாளர் பழனிச்சாமியின் மகன்கள் வினோத்குமார், ஹரி ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றது கட்சிக்குள் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

வினோத்குமார் தற்போது அண்ணா கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளராக உள்ளார். ஹரியும் அ.தி.மு.க. உறுப்பினரே.

இதைப்பற்றி பழனிச்சாமி விளக்கமளித்தார்: எங்கள் குடும்பம் அ.தி.மு.க.வே. தெரியாமல் அந்த பேனரில் புகைப்படம் வந்துள்ளது, அகற்றச் சொல்கிறேன் என கூறினார்.

Tags

Next Story