கோபி பழைய ஆஸ்பத்திரி வீதியில் குண்டும் குழியுமான சாலையில் மழைநீர் தேங்கியதால் மக்கள் அவதி!

கோபி பழைய ஆஸ்பத்திரி வீதியில் குண்டும் குழியுமான சாலையில்  மழைநீர் தேங்கியதால் மக்கள் அவதி!
X
ஈரோடு மாவட்டம் கோபி நகரில், பெரியார் திடல் பஸ் நிறுத்தம் எதிரே அமைந்துள்ள பழைய ஆஸ்பத்திரி வீதி, நீண்ட காலமாக முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது.

கோபி பழைய ஆஸ்பத்திரி வீதி – சீரமைப்பின்றி மக்கள் அவதி :

ஈரோடு மாவட்டம் கோபி நகரில், பெரியார் திடல் பஸ் நிறுத்தம் எதிரே அமைந்துள்ள பழைய ஆஸ்பத்திரி வீதி, நீண்ட காலமாக முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. இந்த சாலை முழுவதும் குண்டும் குழியுமாக இருப்பதால், பொதுமக்கள் நாளும் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக மழைக்காலங்களில், சாலையில் தேங்கும் மழைநீர் சுகாதார சிக்கல்களை ஏற்படுத்தி வருகிறது.

பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் அந்த சாலையில் செல்லும்போது, தடுமாறி விழும் நிலைமை உருவாகியுள்ளது. இதனால் பலர் வீழ்ச்சி மற்றும் சிறு விபத்துகளுக்கு ஆளாகின்றனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், சாலையை உடனடியாக சீரமைக்கக்கோரி நகராட்சிக்கு தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story