பாட்டி-பேரன் இரட்டை கொலையால் அதிர்ச்சி

பாட்டி-பேரன் இரட்டை கொலையால் அதிர்ச்சி
X
நள்ளிரவில் மர்மமான முறையில் பாட்டி-பேரன் இருவரின் கொலை செய்யப்பட்ட சம்பவம் பகுதியையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தாளவாடி அருகிலுள்ள தொட்டகாஜனூரை சேர்ந்த சிக்கம்மா மற்றும் அவரது 12 வயதுடைய பேரன் ராகவன் ஆகியோர், ஏப்ரல் 12ஆம் தேதி நள்ளிரவில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பகுதியையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்த இரட்டை கொலை தொடர்பாக, உறவினர்கள் கோபமாக மாறி, குற்றவாளிகளை கைது செய்யாத வரை உடல்களை பெற்றுக்கொள்ள மறுத்து தாளவாடி போலீசாரிடமும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, இரண்டு தனிப்படைகளை அமைத்த போலீசார், கொலையாளிகளை பிடிக்க தீவிர விசாரணை நடவடிக்கையில் இறங்கினர். இந்த நிலையில், சந்தேகத்தின் பேரில் இருவரை கைது செய்து, ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் பிடியில்படுவார்கள் என போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Tags

Next Story