ஓமலூரில் மூன்று கோவில்கள் திருட்டு

ஓமலூரில் மூன்று கோவில்கள் திருட்டு
X
புனித ஸ்தலங்களில் திருடர்கள் கைவரிசை, ஓமலூரில் 3 கோயில்களில் திருட்டு சம்பவம் அரங்கேறி உள்ளது அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது

Salem district news today, Salem news today live, Salem news, Salem news in tamil, Latest Salem newsகோவில்களில் திருட்டு

காடையாம்பட்டி மற்றும் ஊமகவுண்டம்பட்டி பகுதிகளில் அருகருகே அமைந்துள்ள நீர்மாரியம்மன், மல்லிகா ஈஸ்வரன் மற்றும் மாரியம்மன் கோவில்களில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது. நேற்று காலை, இந்த மூன்று கோவில்களின் பூட்டுகளும் உடைக்கப்பட்டிருந்தன.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும், தீவட்டிப்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் இந்தத் திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

திருடர்கள் நீர்மாரியம்மன் கோவிலில் இருந்து முக்கால் பவுன் தாலி மற்றும் உண்டியலில் இருந்த பணத்தையும், மல்லிகா ஈஸ்வரன் கோவிலில் இருந்து உண்டியல் பணத்தையும் திருடிச் சென்றுள்ளனர். ஆனால், மாரியம்மன் கோவிலில் இருந்து எதுவும் திருடப்படவில்லை.

இந்தத் திருட்டுச் சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story