குடியிருப்புகள் நீரில் மூழ்கின, சேலம் மக்கள் சிரமம்

குடியிருப்புகள் நீரில் மூழ்கின, சேலம் மக்கள் சிரமம்
X
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது.

தெருவில் தேங்கி நிற்கும் மழைநீர்: குடியிருப்போர் அவதி

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட 13வது வார்டில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் வீடுகள் தாழ்வான நிலையில் இருந்தும், தெருக்கள் உயரமாக அமைந்துள்ளதால், மழை காலங்களில் மழைநீர் சாக்கடை கழிவுநீருடன் கலந்து வீடுகளுக்குள் புகுகிறது. தற்போது பெய்த மழையால் தெருவில் தண்ணீர் பெரிதும் தேங்கி, மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். மேலும், சாக்கடைகள் சுத்தம் செய்யப்படாததால் நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த பிரச்சனை தொடர்பாக, டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் சசிகலா கூறியதாவது: “13வது வார்டில் ரூ.30 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை மற்றும் சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மழைநீர் தேங்காமல் இருக்க மின்மோட்டார் மூலம் நீர் அகற்றும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், சாக்கடைகளை தூர்வாரும் பணிக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது,” என தெரிவித்தார். மக்கள், இந்த பணி விரைவாக நடைபெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

Tags

Next Story