சிறுமியிடம் அத்து மீறிய தொழிலாளி கைது

X
By - Nandhinis Sub-Editor |24 April 2025 9:40 AM IST
இந்த துயரமான சம்பவம் குறித்து சிறுமிகளின் பெற்றோர் உடனடியாக சத்தியமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்
சத்தியமங்கலம் அருகே உள்ள கொமராபாளையத்தை சேர்ந்த 9 மற்றும் 5 வயதுடைய இரண்டு சிறுமிகள், நேற்று முன்தினம் இரவு அப்பகுதியிலுள்ள கோவில் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கட்டட தொழிலாளி பாபு (வயது 31), கரடு பகுதியை சேர்ந்தவர், அந்த சிறுமிகளிடம் தவறான முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த துயரமான சம்பவம் குறித்து சிறுமிகளின் பெற்றோர் உடனடியாக சத்தியமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு பாபுவை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சத்தியமங்கலம் கிளை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu