17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு

ஈரோட்டில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – நான்கு பேர் கைது, போக்சோ சட்டத்தில் கடும் நடவடிக்கை :
ஈரோட்டை சேர்ந்த 17 வயது சிறுமி மீது பாலியல் தொந்தரவு நிகழ்ந்ததாகக் கூறி, சிறுமியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஈரோடு VVCR நகர் கிருஷ்ணன் (வயது 21), சென்னிமலை சாலை மணல்மேடு சந்தோஷ் (25), சாஸ்திரி நகர் மணிகண்டன் (25), மரப்பாலம் குகன் (23) ஆகிய நால்வரும் சம்பவத்தில் நேரடியாக ஈடுபட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, நான்கு பேரும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டமான போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது குற்றப்பத்திரிகை தயாரிக்கப்பட்டு, நீதிமன்றத்தில் முறையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. சிறுமிகளை நோக்கிய பாலியல் அத்துமீறல்களுக்கு எதிராக சட்டம் கடுமையான பாணியில் செயல்படுவதை இந்த சம்பவம் நிரூபிக்கிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu