அரசு பஸ் விபத்தில் சிக்கிய 3 பெண்கள்

பண்ணாரி அம்மன் கோவிலில் இருந்து பழனி நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற அரசு பேருந்து, கொத்தமங்கலம் ராஜீவ் நகர் அருகே வளைவான சாலையில் எதிரே வந்த டவுன் பஸ்ஸிற்கு வழிவிடும் நோக்கில் வேகத்தை குறைத்தது. இதையடுத்து, அதே திசையில் பண்ணாரியிலிருந்து புளியம்பட்டி நோக்கி வந்த பி1 அரசு டவுன் பஸ், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, பழனி செல்லும் பஸ்ஸின் பின்புறம் மோதியது. இந்த மோதலால் டவுன் பஸ்ஸின் முன்பக்க கண்ணாடிகள் சிதைந்து சேதமடைந்ததோடு, முன் இருக்கைகளில் பயணித்த மூன்று பெண் பயணிகளுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, கொத்தமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து பவானிசாகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu