செம்முனிச்சாமி கோவிலில் சித்திரை விழா

செம்முனிச்சாமி கோவில் சித்திரை விழா :
அந்தியூர் அருகே பட்லூர் கிராமம், பூனாச்சியில் அமைந்துள்ள செம்முனீஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும் புனித திருவிழா, பாரம்பரியத்தையும் பக்தி உணர்வையும் மையமாகக் கொண்டு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டின் திருவிழா, ஏப்ரல் 18ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, ஏப்ரல் 28ம் தேதி ஆயக்கால் போடுதல், மே 1ல் காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வருதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்று வந்தன.
நேற்று நடைபெற்ற முதல் வனபூஜையில், பூசாரியூர் மடப்பள்ளியில் இருந்து செம்முனி, மண்ணாத சுவாமி மற்றும் பச்சையம்மன் ஆகிய தெய்வங்கள் மகமேரு தேரில் எழுந்தருளினர். 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கோவிலுக்குப் பக்தர்கள் தங்களின் தோளில் சுமந்து இந்த தேரோட்டத்தை நடத்தினர்.
இதையடுத்து நடந்த குட்டிக்குடி திருவிழா எனப்படும் நேர்த்திக்கடன் நிகழ்வில், பக்தர்களால் கொண்டு வரப்பட்ட 4,000க்கும் மேற்பட்ட ஆடுகள் வெட்டி பலியாக்கப்பட்டன. பூசாரிகள், வெட்டப்பட்ட ஆட்டுகளின் ரத்தத்தை அருந்தி பரவச நிலையில் ஆடியது பக்தர்களை மெய்மறக்க வைத்தது.
இவ்விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து கலந்து கொண்டனர். விழாவின் இறுதி நாளான இன்று, சுவாமிகள் மடப்பள்ளிக்கு திரும்பி, மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.
விழாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில், அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் 30க்கும் மேற்பட்ட போலீசார் கடமையில் ஈடுபட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu