கலெக்டர் கொடியசைத்து தொடக்கி வைத்தார்

ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவகம் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் இணைந்து, ஆரம்ப நிலை மையத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் சிறப்பு ஆசிரியர்களுக்காக ஒரு நாள் கல்வி சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது .
இந்த சுற்றுலா பயணத்துக்கு தொடக்கமாக, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கொடியசைத்து தொடக்கி வைத்தார். பயணக்குழுவுக்காக குடிநீர், பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
கொங்கு அறிவாலயம் மற்றும் அரிமா சிறப்பு பள்ளியில் கல்வி பயிலும் குழந்தைகள், அவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் என மொத்தம் 55 பேர் பவானிசாகர் அணை பூங்காவை நோக்கி பயணித்தனர். அங்கு கல்வி மற்றும் அறிவு மேம்பாட்டு தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி, மாவட்ட சுற்றுலா அலுவலர் பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu