திருநங்கைகளின் திருவிழா - கூத்தாண்டவர் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் பங்கேற்பு!

திருநங்கைகளின் திருவிழா -  கூத்தாண்டவர் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் பங்கேற்பு!
X
உலகப்பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை மாத தேரோட்ட விழா இன்று விமர்சையாக தொடங்கியது.

உளுந்தூர்பேட்டை கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம் - ஆயிரக்கணக்கான திருநங்கைகள் மற்றும் பக்தர்கள் பங்கேற்பு :

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உலகப்பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை மாத தேரோட்ட விழா இன்று விமர்சையாக தொடங்கியது.

இந்த விழாவில், ஆயிரக்கணக்கான திருநங்கைகள் பங்கேற்றனர். தேரை வடம் பிடித்து இழுத்து, பக்தி உணர்வோடு நிகழ்வில் ஈடுபட்டனர். பொதுமக்கள், பக்தர்கள், சுற்றுலா பயணிகள் என பெரும் திரண்டம் காணப்பட்டது.

கலை, ஆன்மிகம் மற்றும் திருநங்கை சமூகத்தின் அடையாளமாக விளங்கும் இந்த விழா, ஆண்டுதோறும் தமிழகமெங்கும் இருந்து பக்தர்களை இழுத்துவரும் சிறப்பு கொண்டது. காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags

Next Story