தள்ளுவண்டி மீது மோதிய கார்

கட்டுப்பாட்டை இழந்த காரால் தள்ளுவண்டி சேதம் – அதிர்ச்சியில் மக்கள்
ஈரோடு: நாமக்கலை சேர்ந்த 28 வயதான ஆதித்யா, பவானியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் மேலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று மதியம் தனது ஹூண்டாய் காரில் ஊருக்குச் செல்லும்போது, ஈரோடு–கருங்கல்பாளையம் காவிரி சாலையில் உள்ள போலீஸ் செக்போஸ்ட் அருகே வந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்தது.
கார் முதலில் சாலை டிவைடரில் மோதியபின், இடதுபுறம் திரும்பி சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த தள்ளுவண்டியுடன் மோதி நின்றது. இதில் வண்டியில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன. அதிரடியாக நடந்த இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படாதது அதிரசமாகும்.
விபத்திற்கான காரணம், காரின் பிரேக் திடீரென செயலிழந்ததாலேயே என ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu