மாநில அளவில் பாராட்டை பெற்ற கொங்கு பாலிடெக்னிக் – NSS விருதுகள் வெற்றி!

கொங்கு பாலிடெக்னிக் கல்லூரிக்கு மாநில அளவில் நாட்டு நலப்பணித் திட்ட விருது :
தமிழ்நாடு மாநில நாட்டு நலப்பணித் திட்ட குழுமம் சார்பில், மாநில அளவில் சிறந்த நலப்பணித் திட்ட அலுவலர்களுக்கும் மாணவர்களுக்கும் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, 2018–2023 ஆம் ஆண்டுகளுக்கான விருது வழங்கும் விழா, சென்னை கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில், பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியின் நலப்பணித் திட்ட அலுவலர் பரமேஸ்வரன், 2018–19ம் ஆண்டிற்கான சிறந்த திட்ட அலுவலர் விருதையும், மெக்ட்ரானிக்ஸ் துறையில் பயிலும் மாணவர் எழிலரசன், 2021–22ம் ஆண்டிற்கான சிறந்த நலப்பணித் திட்ட மாணவர் விருதையும் பெற்றனர். விருதுகளை கல்லுாரி கல்வி இயக்கக ஆணையர் சுந்தரவல்லி வழங்கினார்.
இந்த சாதனையை வரவேற்கும் வகையில், கொங்கு வேளாளர் தொழில்நுட்ப கல்வி அறக்கட்டளை தலைவர் குமாரசாமி, செயலாளர் சத்தியமூர்த்தி, பொருளாளர் ரவிசங்கர், மற்றும் அறங்காவலர்கள், கல்லுாரி தாளாளர் வெங்கடாச்சலம், முதல்வர் ராகவேந்திரன், துணை முதல்வர் செந்தில்குமார் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu