அந்தியூர் நகலூரில் புனித செபஸ்தியார் ஆலய தேர்த்திருவிழா

அந்தியூர் நகலூரில் புனித செபஸ்தியார் ஆலய தேர்த்திருவிழா
X
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே நகலூரில் அமைந்த புனித செபஸ்தியார் ஆலயத்தின் வருடாந்திர தேரோட்டம் நேற்று இரவு வெகு விமரிசையாக நடை பெற்றது .

புனித செபஸ்தியார் ஆலய தேர் திருவிழா

அந்தியூர்: அந்தியூர் அருகே நகலூரில் அமைந்துள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தில் நேற்றிரவு தேர்த்திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் ஆலயத்திலிருந்து அழகாக அலங்கரிக்கப்பட்ட மைக்கேல் அதிதூதர், செபஸ்தியார், அந்தோனியார் மற்றும் வனத்துசின்னப்பர் ஆகியோரின் திருவுருவச் சிலைகளை கிறிஸ்தவ பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ஊர்வலமாகச் சுமந்து சென்றனர்.

ஊர்வலம் பெருமாபாளையம் சாலை வழியாகத் தொடங்கி, நகலூர்-அந்தியூர் சாலை வழியாகச் சென்று, இறுதியில் மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதைத் தொடர்ந்து ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த திருவிழாவில் உதகை மறைமலை மாவட்ட பங்குத்தந்தைகளான ஜோசப் அமலதாஸ் மற்றும் அமுல்ராஜ் ஆகியோர் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு திருவிழாவைச் சிறப்பித்தனர்.

Tags

Next Story