அரிசி ஏற்றிய டாரஸ் லாரி கவிழ்ந்தது

அரிசி ஏற்றிவந்த டாரஸ் லாரி கவிழ்ந்து போக்குவரத்து பாதிப்பு
சேலம்: மஞ்சவாடி கணவாய் அருகே அரிசி ஏற்றி வந்த டாரஸ் லாரி கவிழ்ந்து, 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரியலூர், ஆண்டிமடத்தைச் சேர்ந்த சதீஷ் (30), ஆந்திராவில், 25 டன் அரிசி மூட்டைகளை டாரஸ் லாரியில் ஏற்றிக்கொண்டு, கோவைக்குச் செல்ல, நேற்று சேலம் வழியே வந்து கொண்டிருந்தார்.
காலை 9:00 மணிக்கு, மஞ்சவாடி கணவாய் அருகே வந்தபோது, சாலை இறக்கத்தில் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் லாரி சாலையில் கவிழ்ந்தது. ஓட்டுநர் லேசான காயத்துடன் தப்பினார். ஆனால் அரிசி மூட்டைகள் சாலையில் விழுந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வீராணம் காவல்துறையினர், அரிசி மூட்டைகளை வேறு லாரியில் ஏற்றினர். தொடர்ந்து பொக்லைன் இயந்திரம் மூலம் கவிழ்ந்த லாரியை அப்புறப்படுத்தினர். இச்சம்பவத்தால், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu