சமையல் எரிவாயு உயர்வினால் தா,வெ,க கண்டனம்

சமையல் எரிவாயு உயர்வினால் தா,வெ,க கண்டனம்
X
சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டிருப்பதை எதிர்த்து தமிழக வெற்றி கழகத்தினர் குரல் கொடுத்துள்ளனர்

சென்னிமலையில், வீட்டு உபயோகமாகப் பயன்படுத்தப்படும் எல்பிஜி (LPG) காஸ் சிலிண்டர் விலை ₹50 உயர்த்தப்பட்டிருப்பதை எதிர்த்து, தமிழக வெற்றி கழகத்தினர் குரல் கொடுத்துள்ளனர். இதனை எதிர்த்து கட்சி சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னிமலை பகுதியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், வெற்றி கழகச் செயலாளர் அருண்குமார் கூறியதாவது: மூன்றுநாள் முன்பு காஸ் சிலிண்டர் விலை மேலும் ₹50 உயர்த்தப்பட்டது. இது ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரும் சுமையைக் கூட்டும் ஒரு நடவடிக்கையாகும். குறிப்பாக, குடும்பச் செலவுகளை தாங்கி செலுத்தும் பெண்கள் மீது நடத்தப்பட்ட நேரடியான தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. பெட்ரோல், டீசல், கட்டுமான பொருட்கள் விலை ஏற்கனவே உயர்ந்துள்ள நிலையில், அடிப்படை தேவையான சமையல் எரிவாயுவின் விலை உயர்வும் மக்களின் வாழ்வை மோசமாக பாதிக்கிறது, என்று தெரிவித்தார்.

மேலும், சமையல் எரிவாயுவின் விலை உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என அரசு மற்றும் மத்திய அரசை கேட்டுக்கொண்டார். மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த கேள்விக்கு தீர்வு காண வேண்டியது அவசியம் என்றும், விலை உயர்வுக்கு எதிராக தொடர்ந்தும் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.

Tags

Next Story